Home
Mobile

நவம்பர் 30: 50எம்பி ரியர் கேமராவுடன் அறிமுகமாகும் ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன்.!

ரெட்மி நிறுவனம் புதிய ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனை வரும் நவம்பர் 30-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 11டி 5ஜி

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.6-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11டி 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும்

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.

 50எம்பி பிரைமரி கேமரா

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் 50எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு என பல்வேறு சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலைஇருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி,கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

டி 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரே

புதிய ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே

அதேபோல் 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, என்எப்சி/ ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்உள்ளிட்ட பல்வேறு
இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட்விலையில் வரும் என்பதால் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 5ஜி சேவை விரைவில் இந்தியாவில்அறிமுகம் செய்யப்படும் என்பதால் தொடர்ந்து ரெட்மி, ரியல்மி, மோட்டோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் 5ஜிஸ்மார்ட்போன்களை அறிமுகம்
செய்துவருகின்றன.

ரெட்மி 10 பிரைம்

ரெட்மி 10 பிரைம்

மேலும் சில மாதங்களுக்கு முன்பு இந்நிறுவனம் அறிமுகம் செய்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறுசிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன்.

ரெட்மி 10 பிரைம்

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இந்த புதிய ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது.

க்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ

அதேபோல் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதியுடன் இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக Astral White, Bifrost White மற்றும் Phantom Black நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி 10 பிரைம்.ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும்9W reverse சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.1,ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளைகொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Redmi Note 11T 5G smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X