விரைவில் அறிமுகமாகும் அசத்தலான ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன்.!
ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் வரும் அக்டோபர் 28-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் எல்இடி பிளாஷ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட், மைக்ரோபோன், கைரேகை சென்சார் போன்ற பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.
அதேபோல் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி கேமரா இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்னாப்டிராகன் அல்லது மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் வசதியுடன் இந்த புதிய சாதனம் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் கருப்பு, வெள்ளை,நீலம் போன்ற நிறங்களில் இந்த புதிய ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் போன்ற பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன். குறிப்பாக பிரீமியம் ஸ்மார்ட்போனில் உள்ள அதே டிஸ்பிளே
அம்சங்களைகொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரெட்மி 10 பிரைம் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி செல்பீ கேமரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் கேமராக்கள் உதவியுடன் இரவு நேரங்களில் கூட மிகத் துல்லியமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை
எடுக்க முடியும்.

ரெட்மி 10 பிரைம் சாதனத்தில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. இந்த சிப்செட் வசதி இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது ரெட்மி 10 பிரைம். ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்னடோமீட்டர்,ப்ராக்ஸிமிட்டி, பிங்கர் பிரிண்ட் சென்சார்
உள்ளிட்ட பல்வேறு அசத்தலான வசதிகள் இவற்றுள் அடக்கம்.
இந்த சாதனத்தில் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம்.

அதேபோல் இந்நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யும் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனும் தனித்துவமான வசதியுடன் வெளிவரும். குறிப்பாக ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கும். ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது ரெட்மி நோட் 11.


Click it and Unblock the Notifications