48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.!
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ, ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் போன்ற ஸ்மார்ட்போன்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடலும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இப்போது ஆன்லைனில் வெளியான ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனின் சில அம்சங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.43-இன்ச் எப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் பெரிய டிஸ்பிளே வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் வீடியோ கேம் உள்ளிட்ட பல பயன்பாடுகளுக்கு அருமையாக இருக்கும்.

இந்த ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி-95 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 13எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள்ள இடம்பெற்றுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி என பல்வேறு அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடல் வெரும். பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி எனப் பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இரட்டை சிம், வைஃபை , புளூடூத், ஜி.பி.எஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications