64எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் ரெட்மி கே40 கேமிங் எடிஷன்.!
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி கே40 கேமிங் எடிஷன் ஸ்மார்ட்போனை நாளை சீனாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

வெளிவந்த தகவலின்படி இந்த புதிய ரெட்மி கே40 கேமிங் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும். பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் விகிதம்,
எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.
ரெட்மி கே40 கேமிங் எடிஷன் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் டைமன்சிட்டி 1200 SoC சிப்செட் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான MIUI 12.5 வசதியைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
ரெட்மி கே40 கேமிங் எடிஷன் ஸ்மார்ட்போனில் வைஃபை, 5 ஜி, ஜி.பி.எஸ், என்.எஃப்.சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. மேலும் ஐபி 53 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு தன்மையுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக ரெட்மி கே40 கேமிங் எடிஷன் ஸ்மார்ட்போனில் 5065 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. மேலும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, ஜே.பி.எல் ஸ்பீக்கர்ஸ், ஒயிட் ராபெனுடன் லிக்விட் கூல் டெக்னாலஜி உள்ளிட்ட பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த
புதிய ஸ்மார்ட்போன்.
அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே 40 கேமிங் எடிஷனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.23,000-ஆக உள்ளது. மேலும் விரைவில் அனைத்து சந்தைகளிலும் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








