விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி வி25 ஸ்மார்ட்போன்.! என்னென்ன அம்சங்கள்.!
ரியல்மி நிறுவனம் விரைவில் புதிய ரியல்மி வி25 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த ரியல்மி வி25 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி வி25 ஸ்மார்ட்போன் மாடல் 6.58-இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்பு 1,080 x 2,412 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.

ரியல்மி வி25 ஸ்மார்ட்போனில் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 6-சீரிஸ் சிப்செட் ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இந்த ரியல்மி வி25 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகண்டரி சென்சார் + 2எம்பி tertiary சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால்
அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த
ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

ரியல்மி வி25 ஸ்மார்ட்போனில் 4880 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி வி25 ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக், ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி-சி சார்ஜ் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி வி25 ஸ்மார்ட்போன். அதேபோல் டார்க் டே, பீக் ப்ளூ, அரோரா நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications