விரைவில் அறிமுகமாகும் அசத்தலான Realme Q2.! என்னென்ன அம்சங்கள்.!
ரியல்மி நிறுவனம் விரைவில் தளது புதிய ரியல்மி க்யூ2 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்திய தர நிர்ணய பணியகத்தின் (பிஐஎஸ்) இணையதளத்தில் ரியல்மி க்யூ2 ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரபல டிப்ஸ்டர் முதல் சர்மா வெளியிட்டுள்ள ட்வீட்டில், ரியல்மி க்யூ2 ஸ்மார்ட்போன் ஆனது RMX2117 என்கிற மாடல் நம்பரின் கீழ் BIS தளத்தில் காணப்பட்டுள்ளது. இது ரியல்மி க்யூ2 உடன் தொடர்புடையது. எனவே இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

வெளிவந்த தகவலின்படி ரியல்மி க்யூ2 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் அளவிலான புல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல்கள் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 90.7 சதவீதம் அளவிலான ஸ்க்ரீன் டூ பாடி விகிதம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

இந்த ரியல்மி க்யூ 2 ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 800 யூ ப்ராசஸர் வசதியுடன் ARM G7 MC3 GPU வசதியையும் கொண்டுள்ளது. மேலும் இது 6ஜிபி வரை எல்பிடிடிஆர்எக்ஸ் 4 ரேம் உடன் வருகிறது.

இந்த சாதனத்தில் பின்புறம் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (எஃப் / 1.8) + 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் (எஃப் / 2.3) கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ (எப் / 2.4) கேமராஎன மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.மேலும் முன்பக்கத்தில்,16 மெகாபிக்சல் அளவிலான (எஃப் / 2.1) செல்பீ கேமரா உள்ளது.

ஸ்டோரேஜை பொறுத்தவரை, இந்த சாதனம் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 உடன் வருகிறது, மேலும் இது மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி மெமரி விரிவாக்கத்திற்கான ஆதரவையும் தருகிறது. மேலும் டூயல் பேண்ட் வைஃபை, 5 ஜி, 4 ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், க்ளோனாஸ், ப்ளூடூத் 5.0 மற்றும் சார்ஜ் செய்ய யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

ரியல்மி க்யூ2 ஸ்மார்ட்போனில் 5000 பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சம், geomagnetic sensor, ambient light sensor, proximity sensor, ambient light sensor மற்றும் gyro sensor போன்ற பல்வேறு சென்சார் வசதிகளை கொண்டுள்ளது. மேலும் ரூ.14,600-விலையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications