4890எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போன்.!
ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் வெளிவந்துள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம்
ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போன் மாடல் 4890 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வெளிவரும் எனவே நீண்ட் நேரம் கேம்
விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனில் 6.6-இன்ச் டிஸ்பிளே வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்ப அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் மாடலில் 4ஜிப/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளடக்க மெமரி
வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனம் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இந்த ஸ்மார்ட்போன் 16எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 50ஏ
ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும்720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 எனற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளதால் வீடியோ உள்ளிட்ட வசதிகளுக்குமிக அருமையாக இருக்கும்.

ரியல்மி நர்சோ 50ஏ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் ஏஆர்எம் Mali-G52 GPU ஆதரவு உள்ளது.எனவே கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு இந்த சிப்செட் மிக அருமையாக பயன்படும். மேலும் Realme UI 2.0 சார்ந்தஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு விரைவில் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் இந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நர்சோ 50ஏ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம்.

ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + black and white portrait லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த
புதிய ஸ்மார்ட்போன். மேலும் சூப்பர் நைட்ஸ்கேப், நைட் ஃபில்டர்கள், பியூட்டி மோட், எச்டிஆர், பனோரமிக் வியூ, போர்ட்ரெய்ட் மோட், டைம்லாப்ஸ், ஸ்லோ மோஷன் போன்ற கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ.

ரியல்மி நார்சோ 50ஏ சாதனத்தில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல தரமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக 6000 எம்ஏஎச் பேட்டரி இருப்பதால்
அதிக நேரம் கேம் விளையாட முடியும்.

யூஎஸ்பி டைப்-சி போர்ட்இ டூயல்-பேண்ட் வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி5 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ சாதனம். கிட்டத்தட்ட அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ள இந்த ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன். அதேபோல் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications