Home
Mobile

தரமான அம்சங்களுடன் விரைவில் களமிறங்கும் ரியல்மி நார்சோ 30

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் மாடலை வரும் மே 18-ம் தேதி மலேசியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளிவந்த இந்த சாதனத்தின் முக்கிய அம்சங்களை இப்போது பார்ப்போம்.

தரமான அம்சங்களுடன் விரைவில் களமிறங்கும் ரியல்மி நார்சோ 30

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மீடியா டெக் ஹீலியோ ஜி 95 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன். இதுதவிர ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமான அம்சங்களுடன் விரைவில் களமிறங்கும் ரியல்மி நார்சோ 30

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி பி & டபிள்யூ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ
கேமரா இவற்றுள் அடக்கம். ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 8 5ஜி சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 nits பிரைட்னஸ் உட்பட பல்வேறு அருமையான அம்சங்களை
கொண்டுள்ளது இந்த சாதனம். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்.

தரமான அம்சங்களுடன் விரைவில் களமிறங்கும் ரியல்மி நார்சோ 30

இந்த புதிய ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 700 5ஜி சிப்செட் உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்சி2 ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு அம்சங்களுக்கு வேகமாக செயல்படும் இந்த ஸ்மார்ட்போன். மேலும்
Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி monochrome சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம். பின்பு நைட்ஸ்கேப், 48 எம் மோட், புரோ மோட், ஏஐ ஸ்கேன் மற்றும் சூப்பர் மேக்ரோ போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளன இந்த ஸ்மார்ட்போனின கேமராக்கள்.

தரமான அம்சங்களுடன் விரைவில் களமிறங்கும் ரியல்மி நார்சோ 30

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் குவிக் சார்ஜ் ஆதரவுடன் வெளிவந்துள்து இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். சூப்பர்சோனிக் கருப்பு மற்றும் சூப்பர்சோனிக் நீலம் போன்ற நிறங்களில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Realme Narzo 30 smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X