அசத்தலான சிப்செட் வசதியுடன் வெளிவரும் ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன்.!
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனில் தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக நல்ல செயல்திறன் கொண்டது தான் இந்த ஸ்னாப்டிராகன் 870 சிப்செட். அதாவது கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு இந்த சிப்செட் மிகவும் அருமையாக பயன்படும். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு
ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம் டெப்த் லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே
16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

குறிப்பாக ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் 6.62-இன்ச் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் இந்த ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாககொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த புதிய ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் அல்லது 4500 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய சாதனம்வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ,டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி 5, 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன்ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
image courtesy: onleaksxdigit.in


Click it and Unblock the Notifications