விரைவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன்.!
ரியல்மி நிறுவனம் விரைவில் ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனமும் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் தான் அறிமுகம் செய்யப்படும், அதன்பிறகு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்1080x2400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான சாதனம்.

இந்த ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 1200 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். பின்பு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதேபோல் இந்த சிப்செட் வேகமாகவும் செயல்பபடும், பின்பு கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும்.

ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் இந்த அசத்தலான சாதனம். இதுதவிர எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன்.

இந்த ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் அல்லது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்
வெளிவரும் என்று கூறப்படுகிறது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஏ-ஜிபிஎஸ், க்ளோனாஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டபல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி நியோ 2டி. மேலும் இந்த சாதனம் இந்திய சந்தையில் அதிகஎதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications