விரைவில்: தரமான அம்சங்களுடன் வெளிவரும் ரியல்மி சி25எஸ் ஸ்மார்ட்போன்.!
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி சி25எஸ் ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

ரியல்மி சி25எஸ்
அதேபோல் ரியல்மி சி25எஸ் ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதி இருப்பதாக அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் அசத்தலான ரியல்மி சி25எஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக ரியல்மி சி25எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 6000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 570 நிட்ஸ் ப்ரைட்னஸ், 8எம்பி செல்பீ கேமரா உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த புதிய ரியல்மி சி25எஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி சி25 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி சி25
ரியல்மி சி25 ஸ்மார்ட்போனில் 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி சி25 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி70 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கைரேகை சென்சார் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இந்த ரியல்மி சி25 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி சி25 ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒருஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி சி25 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது
அந்நிறுவனம்.

இரட்டை சிம் ஆதரவு, 4 ஜி வோல்டிஇ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உட்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி சி25 ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications