ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் அசத்தலான ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன்.!

|

ரியல்மி நிறுவனம் விரைவில் புதிய ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்னாப்டிராகன் சிப்செட், பாஸ்ட் சார்ஜிங் வசதி, அட்டகாசமான கேமரா எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ரியல்மி 9ஐ

ரியல்மி 9ஐ

ஆன்லைனில் வெளியான தகவலின்படி ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6.59-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக்
கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 2400x1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ்,
240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

வெயிட் பண்ணி வாங்கலாமே: ஜனவரி 3 உறுதி- 50 எம்பி கேமரா, 4ஜிபி ரேம் உடன் விவோ ஒய்21டி: மீண்டும் பட்ஜெட் விலை!வெயிட் பண்ணி வாங்கலாமே: ஜனவரி 3 உறுதி- 50 எம்பி கேமரா, 4ஜிபி ரேம் உடன் விவோ ஒய்21டி: மீண்டும் பட்ஜெட் விலை!

 ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனில்

இந்த புதிய ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே
இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாககொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்டர் செய்தது ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐபோன்., வந்தது டாய்லெட் பேப்பரில் சுருட்டி வைத்த சாக்லேட்!ஆர்டர் செய்தது ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐபோன்., வந்தது டாய்லெட் பேப்பரில் சுருட்டி வைத்த சாக்லேட்!

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனின்

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி கேமராவுடன் மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல
கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

போட்டி போடலாமா?- 10.5 இன்ச் டிஸ்ப்ளே, 7040 எம்ஏஎச் பேட்டரி அம்சம்: அமேசான் பட்டியலில் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8!போட்டி போடலாமா?- 10.5 இன்ச் டிஸ்ப்ளே, 7040 எம்ஏஎச் பேட்டரி அம்சம்: அமேசான் பட்டியலில் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8!

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனில்

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்கொடுக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்வது எப்படி?- 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தடுப்பூசி செலுத்தலாம்., இந்த கார்டும் ஓகே!முன்பதிவு செய்வது எப்படி?- 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தடுப்பூசி செலுத்தலாம்., இந்த கார்டும் ஓகே!

 ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனில் 5000

குறிப்பாக ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்
33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த புதிய ரியல்மி 9ஐ
ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்த ரியல்மி C25Y ஸ்மார்ட்போனின் அம்சங்களை
சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி C25Y

ரியல்மி C25Y

ரியல்மி C25Y ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம்,20:9 ஸ்க்ரீன் ரேஷியோ, 420 நிட் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ரூ.6,999 விலை முதல் புது போன்.. விதவிதமா ரகரகமா புது மாடல்கள்.. இப்போது நம்ப முடியாத சலுகையில்..ரூ.6,999 விலை முதல் புது போன்.. விதவிதமா ரகரகமா புது மாடல்கள்.. இப்போது நம்ப முடியாத சலுகையில்..

 ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர்

ரியல்மி C25Y ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் யுனிசாக் டி 610 எஸ்ஓசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி ஆர் எடிஷன் இன்டர்பேஸ் கொண்டு இயங்குகிறது இந்த அட்டகாசமான புதிய ஸ்மார்ட்போன். எனவே
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த புதிய ரியல்மி C25Y ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரிகார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

SBI ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க புதிய விதி.. இனி இது எல்லோருக்கும் கட்டாயம்.. SBI வெளியிட்ட முக்கிய செய்திSBI ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க புதிய விதி.. இனி இது எல்லோருக்கும் கட்டாயம்.. SBI வெளியிட்ட முக்கிய செய்தி

ரியல்மி C25Y ஸ்மார்ட்போனின்

ரியல்மி C25Y ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் + 2எம்பி மேக்ரோ ஷூட்டர் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்புAI பியூட்டி, HDR மோட், பனோரமிக் வியூ, போர்ட்ரேட், டைம்லாப்ஸ், எக்ஸ்பெர்ட், ப்ரீ-லோடட் ஃபில்டர்ஸ் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

புதிய 70-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த சியோமி நிறுவனம்.! விலை மற்றும் அம்சங்கள்.!புதிய 70-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த சியோமி நிறுவனம்.! விலை மற்றும் அம்சங்கள்.!

த ரியல்மி C25Y ஸ்மார்ட்போன்

5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி C25Y ஸ்மார்ட்போன். மேலும் ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது இந்த ரியல்மி C25Y ஸ்மார்ட்போன் மாடல். 4ஜி LTE, வைஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் v5, GPS/A-GPS, மைக்ரோ- USB மற்றும் 3.5mm
ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறுஇணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி C25Y ஸ்மார்ட்போன்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Realme 9i smartphone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X