விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் Realme 9i 5G - அம்சங்கள் எல்லாம் டாப் டக்கர்!
இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகமாகும் என்பதால் பல செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்து 5ஜி போன்களை அறிமுகம் செய்த வண்ணம்
உள்ளன. அந்த வரிசையில் ரியல்மி நிறுவனமும் விரைவில் அட்டகாசமான ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

எப்போது அறிமுகம்?
அதாவது ரியல்மி நிறுவனம் வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி ரியல்மி 9ஐ 5ஜி (Realme 9i 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது இந்த ரியல்மி 9ஐ 5ஜி போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நிறங்கள்
புதிய ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு மற்றும் தங்க நிறங்களில் வெளிவரும். மேலும் இந்த போனில் இடது பக்கத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் கைரேகை ஸ்கேனர் பட்டன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம்செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
விரைவில் அறிமுகமாகும் ரியல்மி 9ஐ 5ஜி போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளேஎன்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

மீடியாடெக் சிப்செட்
அதேபோல் மீடியாடெக் Dimensity 810 5ஜி சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த
ரியல்மி 9ஐ 5ஜி போனை நம்பி வாங்கலாம். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் அசத்தலானரியல்மி ஸ்மார்ட்போன்.

அட்டகாசமான கேமரா
புதிய ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் 50எம்பி பிரைமரி கேமராவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த அட்டகாசமான
ரியல்மி ஸ்மார்ட்போன்.

அருமையான பேட்டரி வசதி
ரியல்மி 9ஐ 5ஜி போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட
முடியும். பின்பு 33W பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ்
செய்ய முடியும்.

என்ன விலை?
இணையத்தில் கசிந்த தகவலின்படி இந்த புதிய ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,000-க்குள் அறிமுகமாகும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 5ஜி, வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications