தரமான சிப்செட் வசதியுடன் விரைவில் களமிறங்கும் ரியல்மி 8எஸ்.!
ரியல்மி நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்ம் 8எஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக ரியல்மி 8 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன் மாடலும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது இந்த ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் தரமான வகையில் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும் வீடியோ கேம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி இந்த சிப்செட் அருமையாக செயல்படும்.
புதிய ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ரியல்மி சாதனம் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்
கொடுக்கப்பட்டுள்ளது.
ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + அல்ட்ரா வைடு லென்ஸ் + டெப்த் சென்சார் + மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும்.
வெளிவந்த தகவலின்படி, இந்த ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன் ஆனது Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.
டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி 5, 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications