108எம்பி கேமராவுடன் களமிறங்கும் அசத்தலான ரியல்மி 8 ப்ரோ.!

|

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவருகிறது ரியல்மி நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களும் தனித்துவமான வடிவமைப்பு, அசத்தலான சிப்செட் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

108 எம்பி HM221/1.52 பிரைமரி கேமரா

108 எம்பி HM221/1.52 பிரைமரி கேமரா

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற 2021 ரியல்மி கேமரா இன்னோவேஷன் நிகழ்ச்சியில் ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டன. அதன்படி ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் 108 எம்பி HM221/1.52 பிரைமரி கேமரா லென்ஸ் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது. பின்பு இந்த சென்சார் 9 இன் 1 பிக்சல் பின்னிங், ISOCELL பிளஸ், ஸ்மார்ட் ஐஎஸ்ஒ என பல அம்சங்களை கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.

சாதனத்தின் பின்புறம்

இந்த ரியல்மி 8 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 108எம்பி கேமரா மட்டுமின்றி மூன்று இதர சென்சார்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 3எக்ஸ் மோட் கொண்ட சூப்பர் ஜூம் அம்சம் இந்த சாதனத்தில் இருப்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. எனவே ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மூலம் மிகவும் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்கமுடியும்.

18 ஜிபி ரேம் உடன் அசத்தலான ஆசஸ் ராக் போன் 5 வெளிவர தயார்..18 ஜிபி ரேம் உடன் அசத்தலான ஆசஸ் ராக் போன் 5 வெளிவர தயார்..

கேமராவில் புதிய

அதேபோல் ஸ்மார்ட்போன் கேமராவில் புதிய அனுபவத்தை கொடுக்க ரியல்மி நிறுவனம் முயற்சி செய்கிறது என்று தான் கூறவேண்டும். அதன்படி ஸ்டேரி டைம்-லேப்ஸ் வீடியோ (Stary time-lapse) மற்றும் டில்ட்-ஷிப்ட் டைம்-லேப்ஸ் வீடியோ (tilt-shift time-lapse)அம்சங்கள் இந்த ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய வசதியின் மூலம் ஸ்மார்ட்போன் கேமராக்கள் உதவியுடன் எடுக்கப்படும் வீடியோக்களை மிக சுலபமாக கணினி மென்பொருள் மூலம் எடிட் செய்ய முடியும். மேலும்
இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ சாதனங்களின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரியல்மி 7 சிறப்பம்சங்கள்

ரியல்மி 7 சிறப்பம்சங்கள்

6.5' இன்ச், 2400 x 1080 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே
மாலி-ஜி 76 3EEMC4 ஜி.பீ.யுடன்
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 95 பிராசஸர்
அண்ட்ராய்டு 10 உடன் ரியல்மி UI
64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ்
2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார்
2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
16 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா
டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்
இரட்டை 4G VoLTE
Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz)
புளூடூத் 5
GPS, GLONASS
USB Type-C போர்ட்
30W டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
5000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி 7 ப்ரோ சிறப்பம்சங்கள்

ரியல்மி 7 ப்ரோ சிறப்பம்சங்கள்

6.6 இன்ச், 2400 x 1080 பிக்சல்கள் உடைய முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே
அட்ரினோ 618 ஜி.பீ.யுடன்
ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட்
அண்ட்ராய்டு 10 உடன் ரியல்மி UI
64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ்
2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார்
2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
32 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா
டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்
இரட்டை 4G VoLTE
Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz)
புளூடூத் 5,
GPS, NavIC
USB Type-C போர்ட்
65W சூப்பர் டார்ட் சார்ஜ்
4500 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Expected Features Of The Upcoming Realme 8 Pro Smartphone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X