Home
Mobile

தரமான அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாகும் Realme 10 : என்னென்ன அம்சங்கள்?

ரியல்மி நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

ரியல்மி 10

ரியல்மி 10

இந்நிலையில் ரியல்மி நிறுவனம் ரியல்மி 10 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அசத்தலான அம்சங்களுடன் இந்தபோன் பட்ஜெட் விலையில் விரைவில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த அம்சங்களைப் பார்ப்போம்.

 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா

ரியல்மி 10 ஸ்மார்ட்போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை
கொண்டுள்ளது இந்த ரியல்மி போன்.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

ரியல்மி 10 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் சிப்செட் வசதி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். குறிப்பாக இந்த போன் கருப்பு மற்றும் நீல நிறங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி சி30எஸ்

ரியல்மி சி30எஸ்

ரியல்மி சி30எஸ் ஆனது 6.5-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 720x1,600 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..

Unisoc SC9863A சிப்செட்

Unisoc SC9863A சிப்செட்

ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc SC9863A சிப்செட் வசதி உள்ளது. அதேபோல் Realm UI Go Edition சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்தபுதிய ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல்.

8எம்பி ரியர் கேமரா

8எம்பி ரியர் கேமரா

ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனில் சிங்கிள் ரியர் கேமரா மட்டுமே உள்ளது. அதாவது இந்த போன் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு, ஃபுல் எச்டி வீடியோ பதிவு ஆதரவு உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸமார்ட்போன் மாடல். 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு இந்த போனில் பாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லை. வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் வி4.2, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி போன்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Realme 10 smartphone Specifications leaked online: Full Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X