6.67-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன்.!
போக்கோ நிறுவனம் வரும் மார்ச் 22-ம் தேதி புதிய போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் இந்த சாதனத்தின் அனைத்து அம்சங்களும் ஆன்லைனில் வெளிவந்துள்ளது அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

6.67-இன்ச் ஐபிஎஸ் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே
போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67-இன்ச் ஐபிஎஸ் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

எனவே சிறந்த டிஸ்பிளே பாதுகாப்பை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பல்வேறு மக்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த போக்கோ எக்ஸ்3 ப்ரோ டிஸ்பிளே அவ்வளவு எளிதில் உடைந்து விடாது. மேலும் இந்த சாதனம் இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவுடன் வரும் என கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர் வசதி
இந்த ஸ்மார்ட்போனில் 2.96ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர் வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 5ஜி ஆதரவு மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

48எம்பி பிரைமரி சென்சார்
போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8 அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 20எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

5160 எம்ஏஎச் பேட்டரி
இந்த புதிய போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5160 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும் இந்த போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன்.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்றுகூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

புளூடூத் 5, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஜி.பி.எஸ், என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications