விரைவில் 64எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் போக்கோ எக்ஸ்3 ஜிடி.!
போக்கோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் அதிநவீன அம்சங்களுடன் வெளிவருவதால் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மேலும் இந்நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த போக்கோ எம்3 ப்ரோ 5ஜி அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஜூலை 28-ம் தேதி போக்கோ எக்ஸ்3 ஜிடி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது போக்கோ நிறுவனம்.

குறிப்பாக போக்கோ எக்ஸ்3 ஜிடி ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதைப்
பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
போக்கோ எக்ஸ்3 ஜிடி ஸ்மார்ட்போனில் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த சாதனத்தை விரைவாக சார்ஜ் செய்ய முடியும். மேலும் கருப்பு, நீலம், வெள்ளை நிறங்களில் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
போக்கோ எக்ஸ்3 ஜிடி ஸ்மார்ட்போனில் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 2400 × 1080 பிக்சல்கள், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் Dimensity 1100 SoC சிப்செட் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன்
வெளிவரும்.
போக்கோ எக்ஸ்3 ஜிடி சாதனத்தில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.
போக்கோ எக்ஸ்3 ஜிடி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும்.
போக்கோ எக்ஸ்3 ஜிடி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு கைரேகை ஸ்கேனர் உட்பட் பல்வேறு அசத்தலான அம்சங்களுடன் இந்த புதிய போக்கோ எக்ஸ்3 ஜிடி ஸ்மார்ட்போன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications