தரமான அம்சங்களுடன் விரைவில் களமிறங்கும் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.!
போக்கோ நிறுவனம் விரைவில் தனது புதிய போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனம் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் போக்கோ நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி
குறிப்பாக இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகின்றன. அதன்படி விரைவில் வெளிவரும் போக்கோ எம்4 ப்ரோ சாதனம் கூட 5ஜி ஆதரவுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

91மொபைல் வலைத்தளம் வெளியிட்ட தகவலின்படி இந்த புதிய போக்கோ சாதனம் வரும் வாரங்களில் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளது. அதேபோல் மீடியாடெக் சிப்செட் வசதியுடன் வெளிவரும் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் இந்த போக்கோ எம்4 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும். இதுதவிர 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போக்கோ எம்4 ப்ரோ ஸ்மார்ட்போன். சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த போக்கோ சி31 ஸ்மார்ட்போன் மாடலின் அம்சங்களைப் பார்ப்போம்.

போக்கோ சி31
போக்கோ சி31 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது போக்கோ சி31.குறிப்பாக 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ சி31 ஸ்மார்ட்போன்.

இந்த போக்கோ சி31 ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போக்கோ சி31 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி கேமரா சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் ஆதரவுகள் உள்ளன. செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

இந்த போக்கோ சி31 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த போக்கோ சி31 ஸ்மார்ட்போன். அதேபோல் போக்கோ சி31 ஸ்மார்ட்போனின்விலை ரூ.8,499-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








