Home
Mobile

தரமான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன்.!

போக்கோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிக வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனம் போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றிய சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ எம்4 5ஜி

போக்கோ எம்4 5ஜி

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

 எம்4 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும்

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்தத் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

க்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புற

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன. பின்பு4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனில்

குறிப்பாக போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு
18 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம்
சமீபத்தில் அறிமுகம் செய்த போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம், கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன்

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியுடன் அட்ரினோ 619 ஜிபியு வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். பின்பு MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் மாடல்.

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்பு

புதிய போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி Samsung ISOCELL GW3 பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால்அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகைஸ்கேனர், இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Poco M4 5G smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X