Home
Mobile

அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.!

போக்கோ நிறுவனம் விரைவில் தனது புதிய போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் ஆன்லைனில் இந்த சாதனத்தின் சில அம்சங்கள் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி

விரைவில் வெளிவரும் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவரும். அதேபோல் 48எம்பி ரியர் கேமரா,8எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது போக்கோ எம்3 ப்ரோ 5ஜி சாதனம். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள போக்கோ எம்3சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

போக்கோ எம்3 டிஸ்பிளே

போக்கோ எம்3 டிஸ்பிளே

போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080x2340 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

போக்கோ எம்3 சிப்செட்

போக்கோ எம்3 சிப்செட்

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி
இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.

 அடிப்படையாக கொண்டு இந்த

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு இந்த போக்கோ எம்3 ஸ்மார்ட்போன்வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

போக்கோ எம்3  கேமரா

போக்கோ எம்3 கேமரா

இந்த போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறுஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

போக்கோ எம்3 பேட்டரி

போக்கோ எம்3 பேட்டரி

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட்பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Poco M3 Pro 5G smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X