Home
Mobile

தரமான அம்சங்களுடன் விரைவில் களமிறங்கும் போக்கோ எஃப்4 ஜிடி.!

போக்கோ நிறுவனம் விரைவில் போக்கோ எஃப்4 ஜிடி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் கேமிங் வசதிக்கு என்றே போக்கோ எஃப்4 ஜிடி உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த போக்கோ எஃப்4 ஜிடி மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

தரமான அம்சங்களுடன் விரைவில் களமிறங்கும் போக்கோ எஃப்4 ஜிடி.!

போக்கோ எஃப்4 ஜிடி
போக்கோ எஃப்4 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்த புதிய போக்கோ எஃப்4 ஜிடி மாடலில் 6.67-இன்ச் இன்ச் டிஸ்பிளே வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

போக்கோ எஃப்4 ஜிடி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் எள்றே 16எம்பி கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

தரமான அம்சங்களுடன் விரைவில் களமிறங்கும் போக்கோ எஃப்4 ஜிடி.!

போக்கோ எஃப்4 ஜிடி ஸ்மார்ட்போனில் 4700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்நிறுவனம் அறிமுகம் செய்த போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி
போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

தரமான அம்சங்களுடன் விரைவில் களமிறங்கும் போக்கோ எஃப்4 ஜிடி.!

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் என இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் Dimensity 810 சிப்செட் உடன் மாலி ஜி57 எம்சி2 ஜபியு ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும்MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

தரமான அம்சங்களுடன் விரைவில் களமிறங்கும் போக்கோ எஃப்4 ஜிடி.!

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Poco F4 GT Smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X