அசத்தலான சிப்செட் வசதியுடன் விரைவில் களமிறங்கும் போக்கோ எஃப்3 ஜிடி.!
போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் இந்த சாதனத்தின் டீசர் வீடியோ மற்றும் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 1200 SoC சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன்.
போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் AMOLED எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்களுடன் வெளிவரும் போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன்.
குறிப்பாக 64எம்பி பிரைமரி கேமரா, 16எம்பி செல்பீ கேமரா, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 5065எம்ஏஎச் பேட்டரி, 67வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்களுடன் வெளிவரும் போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன். மேலும் அண்மையில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த போக்கோ எம்3 ப்ரோ 5ஜி சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.பின்பு 1080x2400 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் அதிகம் எதிர்பார்த்த 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்தவதற்கு மிகவும்அருமையாக இருக்கும். மேலும்MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த போக்கோ எம்3 ப்ரோ 5ஜி சாதனம்.
இந்த புதிய போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அசத்தலான அம்சங்களுடன் இந்த போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








