தரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் ஒப்போ ரெனோ 7 எஸ்இ.! முழு விவரம்

|

ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பான இந்நிறுவனம் பாஸ்ட் சார்ஜங் வசதி, தரமான சிப்செட், பெரிய டிஸ்பிளே போன்ற அனைத்திலும் அதிக கவனம் செலுத்துகிறது என்றுதான் கூறவேண்டும்.
இந்நிலையில் ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ ரெனோ 7 எஸ்இ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 7 எஸ்இ

ஒப்போ ரெனோ 7 எஸ்இ

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வரும் நவம்பர் 25-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. அதன்பின்பு
தான் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும். இப்போது ஆன்லைனில் கசிந்த ஒப்போ ரெனோ 7 எஸ்இ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப்பார்ப்போம்.

டிஸ்பிளே என்பதால்

ஒப்போ ரெனோ 7 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு1,080x2,400 பிக்சல் தீர்மானம்,20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

ஒப்போ ரெனோ 7 எஸ்இ

இந்த புதிய ஒப்போ ரெனோ 7 எஸ்இ ஸ்மார்ட்போனில் ColorOS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் Dimensity 900 சிப்செட் உடன் Mali-G68 MC4 GPU ஆதரவும் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு இந்த சாதனம் மிக
அருமையாக பயன்படும்.

பி/256ஜிபி உள்ள

ஒப்போ ரெனோ 7 எஸ்இ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ப்போ ரெனோ 7 எஸ்இ சாதனத்தின்

இந்த புதிய ஒப்போ ரெனோ 7 எஸ்இ சாதனத்தின் பின்புறம் 48எம்பி Sony IMX581 பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 4390 எம்ஏஎச் பேட்டரி

ஒப்போ ரெனோ 7 எஸ்இ ஸ்மார்ட்போனில் 4390 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் வசதி மற்றும் பல்வேறு சென்சார் வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 இந்த அசத்தலான ஒ

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி5.1,ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் எனப் பல்வேறு சிறப்பான அமசங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ ரெனோ 7 எஸ்இ மாடல். அதேபோல் இந்த சாதனம் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப்
பார்ப்போம்.

ஒப்போ ஏ55எஸ் 5ஜி

ஒப்போ ஏ55எஸ் 5ஜி

ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி எல்டிபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த புதிய ஒப்போ ஏ55எஸ் 5ஜி மாடலில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்

மேலும் ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்
என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதேபோல் ஒப்போ ஏ55எஸ் 5ஜி சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக ஒப்போ ஏ55எஸ் 5ஜி சாதனம் ஆனது கலர்ஒஎஸ் 11- சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

ப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மா

இந்த ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு கைரோஸ்கோப் சென்சார்,
ஆப்டிகல் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார் எனப் பல்வேறு சென்சார் வசதிகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் 5ஜி, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் வி5, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்ப ஆதரவுகளை கொண்டுள்ளது
ஒப்போ ஏ55எஸ் 5ஜி.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Oppo Reno 7 SE smartphone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X