விரைவில் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமாகும் ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன்.!
ஒப்போ நிறுவனம் விரைவில் புதிய ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். இப்போது ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன் ஆனது மேஜிக் பர்பில் க்விக்சாண்ட், அப்சிடியன் வாரியர் உள்ளிட்ட நிறங்களில் வெளிவரும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு தகுந்தபடி இந்த இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளதாக
ஒப்போ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் இந்த சாதனத்திற்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போனில் 6.59-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன்.

ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர சிறப்பான கேமரா அம்சங்களும் இவற்றுள் அடக்கம்.

இந்த ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போனில் 4880 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்.அதேபோல் அமேசான் தளத்தில் குறிப்பிட்ட ஒப்போ ஸமார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டள்ளது. இதுதவிர அசத்தலான லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட் வாட்ச் சாதனங்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், ஹெட்போன் ஜாக் மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications