5000 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ஒப்போ எப்19 ஸ்மார்ட்போன்.!
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ எப்19 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது
ஆன்லைனில் வெளிவந்த இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

வெளிவந்த தகவலின்படி ஒப்போ எப்19 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 48எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் Dimensity 800u சிப்செட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த புதிய ஒப்போ எப்19 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது ஒப்போ எப்19 ஸ்மார்ட்போன். ரூ.20,000-விலையில் இந்த ஒப்போ எப்19 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ எஃப்19 ப்ரோ, ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் சிறப்பம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ எஃப்19 ப்ரோ மற்றும் ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளன. பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 800 nits பிரைட்நஸ் வசதி, 60Hz refresh rate உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த புதிய ஸ்மார்ட்போன்கள்.
இந்த ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் Dimensity 800U SoC சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ColorOS 11சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம். ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி95 12என்எம் பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ColorOS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.
ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா ஆதரவு, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா ஆதரவு, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 4310எம்ஏச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் சாதனம் 50 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. ஒப்போ எஃப்19 ப்ரோ சாதனம் 30 வாட் பாஸ்ட் சார்ஜ்ங் ஆதரவைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications