Home
Mobile

அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒப்போ எஃப்9 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.!

ஒப்போ நிறுவனம் விரைவில் தனது புதிய ஒப்போ எஃப்9 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சில அம்சங்கள் இப்போது ஆன்லைனில் கசிந்துள்ளது அதைப் பற்றிய விரிவாகப் பார்ப்போம்.

அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒப்போ எஃப்9 ப்ரோ பிளஸ் 5ஜி.!

வெளிவந்த தகவலின்படி ஒப்போ எஃப்9 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் Dimensity 1200 சிப்செட் வசதியுடன் வெளிவரும். பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் கார்னிங் கொரில்லா கிளாஸ், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், நான்கு ரியர் கேமராக்கள் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஒப்போ எஃப்9 ப்ரோ பிளஸ் 5ஜி சாதனம் வெளிவரும். மேலும் இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒப்போ எஃப்9 ப்ரோ பிளஸ் 5ஜி.!

ஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 2400 × 1080 பிக்சல் தீர்மானம், 90Hz refresh rate, 20:9 என்ற திரைவிகிதம், 80Hz touch sampling rate உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி உடன் அட்ரினோ 619 ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக பயன்படும் இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக இன் டிஸ்பிளே கைரேகை
சென்சார், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் இவற்றுள் அடக்கம்.

அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒப்போ எஃப்9 ப்ரோ பிளஸ் 5ஜி.!

ஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி செல்பீ கேமரா உட்பட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போனில் 4300எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒப்போ எஃப்9 ப்ரோ பிளஸ் 5ஜி.!

ஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு க்ரீன் ப்ரீஸ், மிட்நைட் பிளாக் மற்றும் ஸ்டாரி ட்ரீம் உள்ளிட்ட நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ், என்எப்சி, இரட்டை சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Oppo F19 Pro+ 5G smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X