வெளியானது ஒப்போ ஏ94 5ஜி, ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் மற்றும் விலை.!
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ94 5ஜி மற்றும் ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனித்துவான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் இந்தியாவில் இந்தnஇரண்டு ஸ்மார்ட்போன்கள் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ஒப்போ ஏ54 5ஜி
இப்போது ஆன்லைனில் ஒப்போ ஏ94 5ஜி மற்றும் ஒப்போ ஏ54 5ஜி சாதனங்களின் விலை மற்றும் பல்வேறு அம்சங்கள் வெளியாகியுள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டிபிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவரும். பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை
அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ54 5ஜி சிப்செட்
ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம்
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ54 5ஜி மெமரி
இந்த ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டு இந்த ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ஏ94 5ஜி டிஸ்பிளே
ஒப்போ ஏ94 5ஜி ஸ்மார்ட்போனில் 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஒப்போ ஏ94 5ஜி சிப்செட்
ஒப்போ ஏ94 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 800U SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ94 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ஏ94 5ஜி கேமராக்கள்
ஒப்போ ஏ94 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு 5000 எம்ஏஎச்
பேட்டரி ஆதரவுடன் இந்த ஒப்போ ஏ94 ஸ்மார்ட்போன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications