Home
Mobile

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் விரைவில் களமிறங்கும் ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன்.!

ஒப்போ நிறுவனம் விரைவில் தனது புதிய ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜி மற்றும் 5ஜி ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளிவந்த இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன்

ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன்

வெளிவந்த தகவலின்படி ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் மாடல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு இன்-டிஸ்பிளேகைரேகை சென்சார் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல்.

ஒப்போ ஏ74 கேமரா

ஒப்போ ஏ74 கேமரா

மேலும் இந்த ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் மாடலில் 48எம்பி பிரைமரி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 13எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த அசத்தலான சாதனம் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

ஒப்போ ஏ74 பேட்டரி

ஒப்போ ஏ74 பேட்டரி

ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் மாடலில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. பின்பு 5000 எம்ஏஎச்பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்வெளிவரும். கருப்பு, வெள்ளை, சில்வர் போன்ற நிறங்களில் இந்த ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஏ73 ஸ்மார்ட்போனின் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

ஓப்போ ஏ 73 டிஸ்ப்ளே

ஓப்போ ஏ 73 டிஸ்ப்ளே

ஓப்போ ஏ 73 ஸ்மார்ட்போனானது 6.44 இன்ச் முழு ஹெச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதில் 2400 x 1080 பிக்சல்கள் திரை, 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்தோடு கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சமும் கொண்டுள்ளது

ஓப்போ ஏ 73 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஹெச் பேட்டரி 30 வாட்ஸ் விஓஓசி 4.0 வேகமான சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனானது 662 சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி ஆதரவோடு இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் மெமரி விரிவாக்க வசதியும் இருக்கிறது.

ஓப்போ ஏ 73  கேமரா

ஓப்போ ஏ 73 கேமரா

ஓப்போ ஏ 73 ஸ்மார்ட்போனில் குவாட் கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதில் 16 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல்கள் மோனோக்ரோமேடிக் சென்சார்கள் உள்ளது. செல்பி கேமராவிற்கென 16 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஓப்போ ஏ 73 ஸ்மார்ட்போனில் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி பாதுகாப்பு அம்சத்திற்காக பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் இணைப்பு அம்ச ஆதரவோடு கலர் ஓஎஸ் 7.2 மூலம் இயக்கப்படுகிறது. வைபை 802.11, ப்ளூடூத் 5.1, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியை இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது நேவி ப்ளூ மற்றும் க்ளாசிக் சில்வர் வண்ண விருப்பங்களில் கிடைக்கும் எனதெரிவிக்கப்படுகிறது.

ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போன்களின்

மொத்தமாக ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 662, பின்புறத்தில் 16 எம்பி கேமரா, 8 எம்பி கேமரா, 2 எம்பி மற்றும் 2 எம்பி கேமரா கொண்டிருக்கிறது. இதன் செல்பி வசதிக்கென 16 எம்பி செல்பி கேமரா, 6 ஜிபி ரேம் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது. இதில் 128 ஜிபி சேமிப்பு வசதியும்இதில் உள்ளது. 4000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Expected Features Of The Upcoming Oppo A74 Smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X