Oppo A57s போன் இன்னும் வெளியாகல: அதுக்குள்ள லீக்கான விலை மற்றும் விவரங்கள்!
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவருகிறது. அதிலும் இந்நிறுவனம் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துகிறது என்றுதான் கூறவேண்டும்.

ஒப்போ ஏ57எஸ்
இந்நிலையில் ஒப்போ நிறுவனம் ஒப்போ ஏ57எஸ் எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அருமையான சிப்செட்
விரைவில் அறிமுகமாகும் ஒப்போ ஏ57எஸ் ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த
ஸ்மாரட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
மேலும் ColorOS 12.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

சூப்பர் டிஸ்பிளே
புதிய ஒப்போ ஏ57எஸ் ஸ்மார்ட்போன் 6.56-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1,612x720 பிக்சல்ஸ்,60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன்
அறிமுகமாகும்.

50எம்பி பிரைமரி கேமரா
ஒப்போ ஏ57எஸ் ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலானஒப்போ ஸ்மார்ட்போன்.

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ57எஸ்ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் இந்த புதிய போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி
ஒப்போ ஏ57எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை நீங்கள் விரைவில் சார்ஜ் செய்ய முடியும்.

கனெக்டிவிட்டி
குறிப்பாக இந்த புதிய ஒப்போ போனில் கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளது. பின்பு யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது ஒப்போ ஏ57எஸ். மேலும் இந்த ஒப்போ ஏ57எஸ் மாடல் ரூ.15,000-க்குள் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








