Home
Mobile

மீடியாடெக் சிப்செட் வசதியுடன் விரைவில் களமிறங்கும் ஒப்போ ஏ54எஸ்..!

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் 50எம்பி ரியர் கேமரா, மீடியாடடெக் சிப்செட், தரமான பேட்டரி வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வெளிவரும்
என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மீடியாடெக் சிப்செட் வசதியுடன் விரைவில் களமிறங்கும் ஒப்போ ஏ54எஸ்..!

ஒப்போ ஏ54எஸ்

ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும்1,600x720 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட
பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போன்.

ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி35 ஆக்டோ-கோர் சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் சிப்செட் வசதியுடன் விரைவில் களமிறங்கும் ஒப்போ ஏ54எஸ்..!

இந்த புதிய ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உட்பட பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போன்.

மீடியாடெக் சிப்செட் வசதியுடன் விரைவில் களமிறங்கும் ஒப்போ ஏ54எஸ்..!

வைஃபை 5, ப்ளூடூத் வி 5, என்எப்சி, யூஎஸ்பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போன். மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ஒப்போ ஏ54எஸ்
ஸ்மார்ட்போன். அதேபோல் இந்நிறுவனம் சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

மீடியாடெக் சிப்செட் வசதியுடன் விரைவில் களமிறங்கும் ஒப்போ ஏ54எஸ்..!

ஒப்போ கே9 ப்ரோ
ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், மீடியாடெக் Dimensity 1200 சிப்செட் வசதி, 8ஜிபி/12ஜிபி ரேம், 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி, 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது
இந்த ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போன். ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்
என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது ஒப்போ கே9 ப்ரோ.

மேலும் ColorOS 11.3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஒப்போ கே9 ப்ரோஸ் மார்ட்போன் வெளிவந்துள்ளது.அதேபோல் இந்த சாதனத்தில் பல்வேறு கேமரா அம்சங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக Obsidian Warrior,Neon Silver Sea மற்றும் Glacier Overture நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Oppo A54s smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X