வெளியானது அசத்தலான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனின் அமசங்கள்.!

|

ஒன்பிளஸ் நிறுவனம் வரும் ஜூன் 10-ம் தேதி தனது புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனை வரும் ஜூன் 11-முதல் முன்பதிவு செய்ய முடியும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி சாதனத்தின் சில அம்சங்கள் வெளிவந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனில் 6.43-இன்ச் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் வெளிவரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி

இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனில் 64எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் இதற்குமுன்பு அறிமுகம்
செய்யப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட்

ஒன்பிளஸ் நோர்ட்

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் முழு எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 180Hz திரை மாதிரி விகிதம் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம்செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

108எம்பி ரியர் கேமரா கொண்ட மோட்டோ ஸ்மார்ட்போனை கம்மி விலையில் வாங்க ஒரு வாய்ப்பு.!108எம்பி ரியர் கேமரா கொண்ட மோட்டோ ஸ்மார்ட்போனை கம்மி விலையில் வாங்க ஒரு வாய்ப்பு.!

 ஸ்மார்ட்போனில்

இந்த ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 620ஜிபியு வசதியும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்குமிகவும் அருமையாக இருக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட்

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி சென்சார்+8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி + 2எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மற்ற ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ள அதே கேமராக்கள் தான் இதிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் இரவு நேரங்களில் கூட இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தி துல்லியமான புகைப்படங்களை எடுக்கமுடியும்.

ஒன்பிளஸ் நோர்ட்

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மற்றஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான டிஸ்பிளே மற்றும் மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

30வாட் பாஸ்ட் சார்ஜிங்

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

பி.எஸ், க்ளோனாஸ்,

வைஃபை, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், க்ளோனாஸ், நாவிக், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming OnePlus Nord CE 5G smartphone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X