Home
Mobile

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் ஸ்மார்ட்போன்.!

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட்

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட்.!

மேலும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் ஸ்மார்ட்போனின் மாடல் எண் CPH2409 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபேல் இந்த ஸ்மார்போனின் கேமரா வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.59-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.

குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட்.!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் சாதனம் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட்.!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸமார்ட்போன் மாடல் 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் + பிளஸ் ஆதரவு, கொரில்லா கிளாஸ் 5 உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ARM Mali-G68 GPU ஆதரவு மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டைபயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா+2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட்.!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது . பின்பு 65 வாட் SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். பின்பு பல சென்சார் வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் 5.2, என்எஃப்சி, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming OnePlus Nord CE 2 Lite smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X