அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் நோர்ட் 2.!
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்ந ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் Dimensity 1200 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 2
மேலும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 சாதனத்தில் கார்டெக்ஸ் ஏ78 கோர் ஆதரவும் இடம்பெறும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. எனவேஇந்த சிப்செட் வசதிகள் ஸ்மார்ட்போனை இயக்குதவதற்கு அருமையாக வழிவகை செய்யும். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கு முன்புஅறிமுகம் செய்த ஒன்பிளஸ் நோர்ட் சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட்
ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் முழு எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 90Hz
புதுப்பிப்பு வீதம் மற்றும் 180Hz திரை மாதிரி விகிதம் இடம்பெற்றுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் பிராசஸர்
இந்த ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 620ஜிபியு வசதியும் உள்ளது.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஒரளவு கேமிங் திறன் கொண்டு வெளிவந்துள்ளது, இதுவே ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் இருந்தால்
கேமிங் வசதிக்கு மிகவும் அருமையாக செயல்படும்.

ஒன்பிளஸ் நோர்ட்
ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி சென்சார்+8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி + 2எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்கொண்ட செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மற்ற ஸ்மார்ட்போன்களில்இடம்பெற்றுள்ள அதே கேமராக்கள் தான் இதிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் இரவு நேரங்களில் கூட இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்திதுல்லியமான புகைப்படங்களை எடுக்கமுடியும்.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
ஒன்பிளஸ் நோர்ட் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான டிஸ்பிளே மற்றும்மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4000எம்ஏஎச் பேட்டரி
ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30வாட்பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications