நீங்கள் எதிர்பார்த்த அம்சங்களுடன் வெளிவரும் அசத்தலான ஒன்பிளஸ் 9டி.!
ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருகின்றன, அதசேமயம் இவற்றின் விலை சற்று உயர்வாக இருக்கிறது
என்றுதான் கூறவேண்டும்.

ஒன்பிளஸ் 9டி ஸ்மார்ட்போன்
இந்நிறுவனம் ஒன்பிளஸ் 9டி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டின் 3-ஆம் காலாண்டில் ஒன்பிளஸ் 9டி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதுவும் இந்த சாதனம் ஒப்போ நிறுவனத்தின் கலர்ஓஎஸ் 11 உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

மேலும் வரவிருக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 108 மெகாபிக்சல் ஹாசல்பாட் குவாட் கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஆனால் 9டி-க்கு ப்ரோ மாடல் இருக்காது என டிப்ஸ்டர் கூறுகிறார். குறிப்பாக ஒன்பிளஸ் 9டி ஸ்மார்ட்போன் மாடல் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

Flexible AMOLED டிஸ்பிளே
ஒன்பிளஸ் 9டி ஸ்மார்ட்போன் ஆனது எல்டிபிஓ சாம்சங் இ4 Flexible AMOLED டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவரும் என்றுகூறப்படுகிறது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஒன்பிளஸ் 9டி ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் சிப்செட் வசதி
ஒன்பிளஸ் 9டி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் சிப்செட் வசதி இடம்பெறும் என்று கூப்படுகிறது. இதுதவிர ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் இந்த சாதனத்திற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அண்மையில் ஆன்லைனில்வெளியான ஒன்பிளஸ் நோர்ட் 2 சாதனத்தின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட் 2
ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்ப வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 1200 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

அதேபோல் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 மாடலின் பின்புறம் 50எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, 4500 எம்ஏஎச் பேட்டரி உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ்
நோர்ட் 2 ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications