ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியுடன் விரைவில் களமிறங்கும் ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போன்.!
ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் தனது புதிய ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது ஒன்பிளஸ் 9ஆர்டி
ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும்.

மேலும் தற்போது ஆன்லைனில் கசிந்த ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். இந்த ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போன் ஆனது ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட தனித்துவமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் களமிறங்கும்.

ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 அல்லது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் சிப்செட் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிக்கு இந்த சிப்செட் மிக அருமையாக செயல்படும்.

ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். கிட்டத்தட்ட ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் உள்ள அதே கேமரா அம்சங்களும் இந்த ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போனில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் எடை குறைவாக இருக்கும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சாதனம் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும்.

அதேபோல் ஃபேஸ் அன்லாக், 5ஜி, 4ஜி எல்டிஇ, என்எப்சி, ப்ளூடூத் வெர்ஷன் 5.2, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 9ஆர்டி ஸமார்ட்போன். கண்டிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்படும் எனகூறப்படுகிறது.மேலும் இப்போது அமேசான் தளத்தில் அதிநவீன ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.எனவே இந்த சிறப்பு தள்ளுபடியை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications