விரைவில்: 50எம்பி கேமராவுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 9.!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த ஆண்டு துவகத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் இணையத்தில் தற்பொழுது கசிந்துள்ளது. கசிந்துள்ள படங்களின்படி, புதிய ஒன்பிளஸ் சாதனம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் இப்போது வந்த தகவலின்படி ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 20எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் 3D ரெண்டர்கள் மூலம் சாதனதின் டிசைன் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே இணையத்தில் கசிந்தது. ஆனால், இதுவரை லைவ் புகைப்படம் எதுவும் வெளியாகாமலிருந்தது, அந்த நிலை இப்போது மாறியுள்ளது. புகைப்படங்களைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் 9 இன் வடிவமைப்பு ஒன்பிளஸ் 8T இன் வடிவமைப்பைப் போலவே இருக்கிறது.

அதாவது வடிவமைப்புத் துறையில் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனில் அசாதாரணமான மாற்றம் என்று எதுவும் பெரியளவில் இல்லை என்பது இப்பொழுது தெரியவந்துள்ளது. PhoneArena க்கு அனுப்பப்பட்ட படங்கள் ஸ்மார்ட்போனை சில்வர் வண்ண வேரியண்ட்டில் காண்பிக்கின்றது. இவை இறுதி தயாரிப்பு கட்டங்களுக்குச் செல்லலாம் அல்லது ஒரு மாடல் டிசைனாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சாதனத்தின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்ட மிகப்பெரிய கேமரா பம்ப் உள்ளது. சாதனத்தின் அடையாளத்தை மறைக்க ஒரு தனித்துவமான லோகோவும் உள்ளது மற்றும் பெரும்பாலான பிராண்டுகள் முன்மாதிரி சாதனங்களுக்கான தனிப்பயன் லோகோக்களைக் கொண்டுள்ளன. ஸ்மார்ட்போன் மெட்டல் ஃபிரேம் கொடுக்கப்பட்டுள்ளது. சாதனத்தின் அனைத்து பக்கங்களும் படங்கள் மூலம் கசிந்துள்ளது.

ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் 6.55' இன்ச் 1080 x 2040 பிக்சல் கொண்ட எஃப்.எச்.டி பிளஸ் டிஸ்பிளேயுடன், 401 பிபி மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் HDR மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. சிம் ட்ரே ஸ்லாட்டுடன் டைப்-சி போர்ட் மற்றும் கீழே ஒரு ஸ்பீக்கருடன் இரட்டை ஸ்பீக்கர் ஸ்டீரியோ அமைப்பை இந்த சாதனம் கொண்டிருக்கும் என்பதைப் படங்கள் வெளிப்படுத்துகின்றது.
சிம் ட்ரேயில் ஒரு ரப்பர் முத்திரை இருப்பதாகத் தெரிகிறது, இது போனின் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அமைப்பை காட்டுகிறது. ஆனால் எந்த அதிகாரப்பூர்வ ஐபி மதிப்பீடும் இல்லாமல் இருக்கிறது. ஒன்ப்ளஸ் 9 இல் நிறுவப்பட்ட இன்வேர் பயன்பாட்டின் கசிந்த ஸ்கிரீன் ஷாட்களின்படி புதிய சாதனம் 'லஹைனா' என்ற பெயர் கொண்ட ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வைத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன், 4500 எம்ஏஎச் பேட்டரியால் ஆதரிக்கப்படுகிறது. மேலும், இது அண்ட்ராய்டு 11 அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன் ஓஎஸ் 11 உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. கேமரா விவரக்குறிப்புகள் மென்பொருளால் தானாகவே மாற்றப்பட்டன, இதன் காரணமாகப் பயன்பாட்டால் உண்மையான விவரக்குறிப்புகளை அடையாளம் காண முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








