Home
Mobile

வெளியானது ஒன்பிளஸ் 9 ப்ரோ அம்சங்கள்.! அடேங்கப்பா சூப்பர் கேமரா.!

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் கீக்பெஞ்சில் தளத்தில் ஒன்பிளஸ் 9 ப்ரோ சில அம்சங்கள் காணப்பட்டது. அதன்படி கீக்பெஞ்சில் தளத்தில் வெளிவந்த இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 9 ப்ரோ

ஒன்பிளஸ் 9 ப்ரோ

கீக்பெஞ்சில் தளத்தில் தளத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தின் மாடல் எண் LE2115 என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ  சிப்செட்

ஒன்பிளஸ் 9 ப்ரோ சிப்செட்

ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி இடம்பெறும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வீடியோ கேம் போன்ற வசதிகளுக்கு மிகவும் அருமையாக உதவும் இந்த ஒன்பிளஸ் 9 ப்ரோஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல்.

ஒன்பிளஸ் 9 ப்ரோ மெமரி

ஒன்பிளஸ் 9 ப்ரோ மெமரி

ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் வசதி மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம்செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஒன்பிளஸ் 9 ப்ரோ கேமரா

ஒன்பிளஸ் 9 ப்ரோ கேமரா

ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி Sony IMX766 வைடு ஆங்கிள் லென்ஸ் + 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஒன்பிளஸ் 9 ப்ரோ பேட்டரி

ஒன்பிளஸ் 9 ப்ரோ பேட்டரி

ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தில் QHD+டிஸ்பிளே வசதி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன்வெளிவரும். பின்பு 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுஇவற்றுள் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதற்குமுன்பு வெளிவந்த ஒன்பிளஸ் 9 சாதனத்தின் தகவல்களைவிரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 9

ஒன்பிளஸ் 9

ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 120Hz refresh rate வசதியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனில் 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 20எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் உள்ளிட்டவை இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 9 மெமரி

ஒன்பிளஸ் 9 மெமரி

புதிய ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

ஒன்பிளஸ் 9 சிப்செட்

ஒன்பிளஸ் 9 சிப்செட்

ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஒன்பிளஸ் 9 பேட்டரி

ஒன்பிளஸ் 9 பேட்டரி

ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ

ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஒன்பிளஸ் 8 தொடர் ஸ்மார்ட்போன்களை விட அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனங்கள் வெளிவரும். ஆனால் இவற்றின் விலை சற்று உயர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Expected Features Of The Upcoming OnePlus 9 Pro Smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X