விரைவில் 4500 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 9.!

|

இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் சிறந்த மென்பொருள் வசதி மற்றும் அதிநவீன கேமராக்களுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9

மேலும் இப்போது ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

 ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன்

வெளிவந்த தகவலின்படி ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 120Hz refresh rate வசதியை கொண்டிருக்கும் என்றும், ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.9-இன்ச் Quad HD+ டிஸ்பிளே மற்றும் 120Hz refresh rate வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ.!டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ.!

ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ

அதேபோல் ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் 4500 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ்

குறிப்பாக ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட் இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனில்

மேலும் ஒன்பிளஸ் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனில் 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் +20எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் உள்ளிட்டவை இடம்பெறும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமராக்கள் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.

ல் இவற்றின் விலை

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஒன்பிளஸ் 8 தொடர் ஸ்மார்ட்போன்களை விட அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனங்கள் வெளிவரும். ஆனால் இவற்றின் விலை சற்று உயர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ

அதேபோல் ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனங்களில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்கள் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

Best Mobiles in India

English summary
Expected Features Of The Upcoming Oneplus 9, OnePlus 9 Pro Smartphones: Read more about this in Tamil GizBotMeta Keywords: oneplus

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X