Home
Mobile

ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா எக்ஸ்20.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா எக்ஸ்20.!

மேலும் நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். வெளிவந்த தகவலின்படி 1.8ஜிகாஹெர்ட் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்
என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்;ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. பின்பு நான்கு ரியர் கேமராக்கள் ஆதரவுடன் இந்த நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா எக்ஸ்20.!

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ஆனது 6.3-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1560 பிக்சல் தீர்மானம், 19.5:9 திரைவிகிதம், 400 nits பிரைட்நஸ் உள்ளிட்ட பல்வேறு அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். கிட்டத்தட்ட போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் உள்ள அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனிலும் இடம்பெற்றுள்ளது.

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் அட்ரினோ 610 ஜிபியு மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் இந்த சாதனத்தில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் உள்ளிட்ட வசதிகள் இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா எக்ஸ்20.!

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு அசத்தலான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். இப்போது வரும் மற்ற நிறுவனங்களின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் 48எம்பி ரியர் கேமராவுடன் தான் வருகின்றன. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எம்3 சாதனம் கூட 48எம்பி ரியர் கேமராவுடன் வெளிவந்தது. இந்த நோக்கியா 3.4 சாதனத்திலும் 48எம்பி கேமரா இடம்பெற்றிருந்தால் பயன்படுத்துவதற்கு நன்றாக இருந்திருக்கும்.

ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா எக்ஸ்20.!

பட்ஜெட் விலைக்கு தகுந்தபடி அசத்தலான பேட்டரி வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். கண்டிப்பாக வீடியோ கேம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பயன்படுத்த தகுந்தபடி இந்த சாதனம் நல்ல பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் 4 ஜி ,வைஃபை ஏசி, புளூடூத், ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Expected Features Of The Upcoming Nokia X20 Smartphone : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X