Home
Mobile

அசத்தலான அம்சங்களுடன் விரைவில் களமிறங்கும் நோக்கியா ஜி300 5ஜி.!

நோக்கியா ஜி50 அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து புதிய நோக்கியா ஜி300 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். குறிப்பாக இந்த புதிய நோக்கியா ஜி300 5ஜி ஸ்மார்ட்போன் அதிநவீன அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த நோக்கியா ஜி300 5ஜி மாடல். மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த நோக்கியா ஜி300 5ஜி சாதனத்தின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா ஜி300 5ஜி

நோக்கியா ஜி300 5ஜி

நோக்கியா ஜி300 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக மீடியாடெக் பிராசஸர் விட ஸ்னாப்டிராகன பிராசஸர் மிக அருமையாக செயல்படும் என்றேகூறலாம். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஸ்மார்ட்போனில் டிஎப்டி

நோக்கியா ஜி300 5ஜி ஸ்மார்ட்போனில் டிஎப்டி டிஸ்பிளே வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 720×1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த நோக்கியா ஜி300 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

+ 5எம்பி அல்ட்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்ப ஆதரவுடன் இந்த நோக்கியா ஜி300 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும். மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் 16எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம்மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

4470 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது.

நோக்கியா ஜி300 5ஜி ஸ்மார்ட்போனில் 4470 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். பின்பு ஜிபிஎஸ், வைஃபை, 5ஜி, எல்டிஇ, புளூடூத் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த நோக்கியா ஜி50ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

நோக்கியா ஜி50 5ஜி

நோக்கியா ஜி50 5ஜி

இந்த நோக்கியா ஜி50 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.82-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் மற்றும் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். நோக்கியா ஜி 50 மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்ஆகியவை அடங்கும்.

 முன்புறம் 8எம்பி செல்பீ

இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு உள்ளது. மேலும் நோக்கியா ஜி50 ஸ்மார்ட்போனின்ஸ்டோரேஜ் பற்றி பார்க்கையில், இது 64 ஜிபி உள் சேமிப்பை ஆதரிக்கிறது. கூடுதல் ஸ்டோரேஜ் சேவைக்காக இந்த சாதனம்மைக்ரோ எஸ்டி கார்டு 512 ஜிபி வரை விரிவாக்கத்தை ஆதரிக்கிறது. இதுதவிர 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் வி5.0, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன்.

லரோமீட்டர், கைரோஸ்கோப்,

ஆக்ஸிலரோமீட்டர், கைரோஸ்கோப், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் போன்ற பல சென்சார் ஆதரவுகளை
கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி50 5ஜி சாதனம். மேலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் கொண்டு வெளிவந்துள்ளது நோக்கியா ஜி50 5ஜி சாதனம்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Nokia G300 5G smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X