விரைவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் நோக்கியா சி20 பிளஸ்.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் தனது புதிய நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் படஜெட் விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி வரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது UNISOC SC9863A சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன்.

நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் வி-நாட்ச் டிஸ்பிளே வசதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 720 x 1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி, 5எம்பி செல்பீ கேமரா என பல்வேறு ஆதரவுகளுடன் நோக்கியா சி20 பிளஸ் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த நோக்கியா 2720 வி பிளிப் போன் சாதனத்தின் சிறப்பம்சங்களை இப்போது பார்ப்போம்.
நோக்கியா 2720 வி பிளிப் சாதனம் ஆனது 2.8-இன்ச் QVGA டிஸ்பிளே உடன் 240×320 பிக்சல்கள் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வெளிப்புறத்தில் 240 × 240 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 1.3-இன்ச் டிஸ்பிளே வசதியும் உள்ளது. எனவே பயன்படுத்தவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

1.1ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் குவால்காம் 205 (MSM8905) சிப்செட் உடன் அட்ரினோ 304 ஜிபியு வசதியும் உள்ளது. மேலும் KaiOS இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த நோக்கியா 2720 வி பிளிப் சாதனம் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
நோக்கியா 2720 வி பிளிப் மாடலில் 512ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 2720 வி பிளிப் மாடலில் 1500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 2எம்பி ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மொபைல் போன். மேலும் நோக்கியா 2720 வி பிளிப் மாடலில் கூகுள் அசிஸ்டெண்ட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யூடியூப், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற பிற ஆப் பயன்பாடுகளை ஆதரிக்கிறது இந்த நோக்கியா 2720 வி பிளிப் மாடல். இதுதவிர 4ஜி வோல்ட்இ, வைஃபை ஹாட்ஸ்பாட் கொண்ட Wi-Fi 802.11 b / g / n ஆதரவு,புளூடூத் 4.1 எல்இ, ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ்,
மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

நோக்கியா 2720 வி பிளிப் மாடலின் விலை 79.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.5875-ஆக உள்ளது. குறிப்பாக கருப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது நோக்கியா 2720 வி பிளிப் மாடல்.


Click it and Unblock the Notifications