Home
Mobile

விரைவில் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் மோட்டோரோலா 5ஜி ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் தனது புதிய மோட்டோரோலா மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் சிப்செட், அசத்தலான கேமராக்கள் மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின்
அம்சங்களைப் பார்ப்போம்.

 6.8-இன்ச் டிஸ்பிளே

6.8-இன்ச் டிஸ்பிளே

மோட்டோரோலா மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று என்று கூறப்படுகிறது. மேலும்
1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
குறிப்பாக வீடியோ கேம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் இந்த சாதனத்தின் டிஸ்பிளே வசதி.

ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட் வசதி

ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட் வசதி

மோட்டோரோலா மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி ஸமார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாககொண்டு வெளிவரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜிபி/6ஜிபி ரேம்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

48எம்பி பிரைமரி லென்ஸ்

48எம்பி பிரைமரி லென்ஸ்

இந்த மோட்டோரோலா மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் +8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால்அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

குறிப்பாக மோட்டோரோலா மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி

மோட்டோரோலா மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் வைஃபை, புளூடூத் 5.1, என்எப்சி, ஜிபிஎஸ், க்ளோனாஸ், நாவிக், இரட்டை சிம்
மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட்விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

photo courtesy: voice

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Motorola Moto G Stylus 5G smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X