விரைவில்: குறைந்த விலையில் அறிமுகமாகும் மோட்டோ 5ஜி ஸ்மார்ட்போன்.!
மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களும் தனித்துவமான மென்பொருள் மற்றும் அசத்தலான கேமரா வசதிகளுடன் வெளிவருகிறது.

இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை இபிசா (Ibiza) எனும் உருவாக்கி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன. இப்போது ஆன்லைனில் வெளியாகியுள்ளது இந்த சாதனத்தின பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.
வெளிவந்த தகவலின்படி மோட்டோரோலா இபிசா ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி ஆதரவைக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த 5ஜி ஸ்மார்ட்போன்ற குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் மோட்டோரோலா இபிசா ஸ்மார்ட்போன் மாடல் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டிற்குள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படும். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
இபிசா ஸ்மார்ட்போன் மாடல் 90 ஹெர்ட்ஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே வடிவமைப்புடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மாரட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
ஆனாலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் கொண்டிருக்குமா அல்லது புல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் கொண்டிருக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை. முன்பு வெளிவந்த தகவலின்படி மோட்டோரோலா இபிசா ஸ்மார்ட்போன் 2021 முதல்
காலாண்டு வாக்கில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.
பின்பு இந்தியாவில் இந்த குறைந்த விலை 5ஜி மோட்டோரோலா ஸ்மார்ட்போன் இபிசா அல்லது மோட்டோ ஜி40 என எந்த பெயரில் விற்பனைக்கு வரும் என்பதும் தற்சமயம் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனாலும் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications