Home
Mobile

6.6-இன்ச் டிஸ்பிளேவுடன் விரைவில் வெளிவரும் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா.!

மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப்
பார்ப்போம்.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா 6.6-இ

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா 6.6-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10 பிளஸ்மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மோட்டோரோலா எட்ஜ் 30

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 50எம்பி செகண்டரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும்பல கேமரா அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தகவலின்படி மோட்டோரோலா எட்ஜ் 3

வெளிவந்த தகவலின்படி மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் ஆனது கேமிங் உள்ளிட்ட பல வசதிகளுக்கு மிக அருமையாக செயல்படும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு
அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா

குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 ஸ்மார்ட்போனில்

இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் பல சென்சார் வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

, புளூ

வைஃபை, புளூடூத் 5.1, என்எப்சி, மற்றும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்படும்
என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Motorola Edge 30 Ultra smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X