அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மார்ட்போன்.!
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மார்ட்போன் ஆனது வெள்ளை, நீல நிறங்களில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மாரட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவரும். பின்பு 1,080×2,400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது
இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மாரட்போனின் பின்புறம் 108எம்பி ரியர் கேமரா +16எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி tertiary லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்
என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.
மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மாரட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.
இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மாரட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை
பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.
அதேபோல் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மாரட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய சாதனம் வெளிவரும்.
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், வைஃபை, புளூடூத் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மாரட்போன். மேலும் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications