108எம்பி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போன்.!
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 17-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிநவீன அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் OLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போன்.

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 800u சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சிப்செட் வசதி கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கும் மிக அருமையாக பயன்படும்.

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா +2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமராவுடன் வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

வெளிவந்த தகவலின் அடிப்படையில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி மெமரி ஆதரவுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன்
ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 30 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அமசங்களுடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போன்வெளிவரும் என்று கூறப்படுகிறது.

5ஜி, எல்டிஇ, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போன்மாடல். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.


Click it and Unblock the Notifications