Home
Mobile

அடுத்த மாதம் அறிமுகமாகும் மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன்.! முழு விவரங்கள்.!

மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன் மாடலை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி51

மோட்டோ ஜி51

மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே
கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு மிக அருமையாக செயல்படும் இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட். அதேபோல் ஆண்ட்ராய்டு 11இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த சாதனத்திற்குஆண்ட்ராய்டு 12 அப்டேட் கூட கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன்

மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன் மாடலில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி51

மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன். அதேபோல் பெரிய டிஸ்பிளே, தரமான பேட்டரி வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகாப் பார்ப்போம்.

மோட்டோ ஜி50 5ஜி

மோட்டோ ஜி50 5ஜி

மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி உள்ளது. பின்பு 720x1,600பிக்சல் தீர்மானம்,90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்குமிகவும் அருமையாக இருக்கும்.

த மோட்டோ ஜி50 5ஜி

இந்த மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்கதளத்தை கொண்டுளள்து இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி
இவற்றுள் அடக்கம்.யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி, வைஃபை ஏசி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி 5, ஜிபிஎஸ், 5ஜி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது மோட்டோ ஜி50 5ஜி.

 கொண்டுள்ளது இந்த

இந்த மோட்டோ ஜி50 5ஜி பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுவெளிவந்துள்ளது இந்த மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Moto G51 smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X