விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன்.! முழு விவரம்.!
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் இந்தியாவில் மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனின் புகைப்படம்
மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது,அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி32
மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.
மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனில் யுனிசாக் T606 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்றே கூறலாம்.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18
வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
மோட்டோ ஜி52

மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் pOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம்,20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
குறிப்பாக மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக டூயல் கேப்சர், ஸ்மார்ட் கம்போசிஷன், ஸ்பாட் கலர், லைவ் மோட்டோ, ப்ரோ மோஷன் மற்றும் அல்ட்ரா-வைட் டிஸ்டோர்ஷன் கரெக்ஷன் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியுடன் அட்ரினோ 610ஜிபியு ஆதரவு உள்ளது. பின்புஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம். மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 33 வாட்டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.0, எப்எம் ரேடியோ,ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட்,என்எப்சி, 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications