Home
Mobile

108எம்பி கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி200 ஸ்மர்ட்போன்.!

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் புதிய மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி200

மோட்டோ ஜி200

மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போனி

அதேபோல் மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போனில் 108எம்பி மெயின் கேமரா + 13எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஜி200 ஸ்மார்ட்போனில் குவால்காம்

மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். குறிப்பாக கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன மிக அருமையாக செயல்படும். அதேபோல் இந்த மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போனின்அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி 100

மோட்டோ ஜி 100

மோட்டோ ஜி 100 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் எல்சிடி பேனலுடன் 21: 9 விகித விகிதம் கொண்ட 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகித டிஸ்பிளேயுடன்வெளிவந்துள்ளது. அதேபோல் 560 நைட்ஸ் பிரகாசம், எச்டிஆர் 10, டிசிஐ-பி 3 கலர் காமெட் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

பு இந்த ஸ்மார்ட்போனில் 8

அதேபோல் மோட்டோ ஜி 100 மாடல் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 20W பாஸ்ட் சார்ஜிங்கிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது.

 ஜி 100 மாடலின் பின்பு

மேலும் மோட்டோ ஜி 100 மாடலின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமராவுடன் மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் மோட்டோ ஜி 100 இல் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது. பிரத்தியேக கூகிள் அசிஸ்டென்ட் பட்டன் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளன. குறிப்பாக 5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 6 802.11 axe,புளூடூத் 5.1, ஜிபிஎஸ் (எல் 1 + எல் 5), என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Moto G200 smartphone : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X